» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவில் இருக்காது: வைகோ

சனி 14, செப்டம்பர் 2019 4:04:06 PM (IST)

இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவில் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்றங்கள் சவுக்கடி கொடுத்திருக்கின்றன. எனது கட் அவுட்டினை எங்கும் வைக்க நான் என்றுமே அனுமதித்தது இல்லை. இன்று தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புக்குத் தேர்வில் நன்மையும் இருக்கிறது. ஆனால், திடீரென ஒரு முடிவு என்பதுதான் யோசிக்க வேண்டியது. தேர்வு அவசியம். இல்லையெனில் நாம் தயாராக முடியாது. 

அந்த விழிப்புணர்வு வரட்டும். கன்னியாகுமரி கிராமத்தில் சிறிய பள்ளியில் பயின்று இன்று உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன். அவர் தோல்வி அடையவே இல்லை. அவரது முயற்சியில் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார். இன்னும் ஒரு வருடத்திற்கு ஆர்பிட்டர் அங்கு நிலவை சுற்றிக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரும் தொகை முதலீடாக வரும் என அறிவித்திருக்கிறார்கள். 

ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும் எனும் கேள்வி எழுந்து வருகிறது. இந்தியாவில் இந்தி மொழி மட்டும் என்றால் தமிழகம், வட கிழக்கு மாநிலங்கள் இருக்காது. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியை எதிர்கின்றன. வட கிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம் ஆட்சி மொழி ஆகும். அரிசுவடிகூட அறியாத ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக உள்ளார் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer EducationAnbu Communications

Thoothukudi Business Directory