» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேனர்களை அப்புறப்படுத்திய பின் விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,செல்லூர் ராஜு

சனி 14, செப்டம்பர் 2019 3:47:54 PM (IST)

சுபஸ்ரீ பலியான சம்பவத்தின் எதிரொலியாக பேனர்களை அப்புறப்படுத்திய பின்னரே அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியும்,செல்லூர் ராஜுவும் ஓவிழாவில் பங்கேற்றனர்..

சென்னை பள்ளிக்கரணையில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பேனர் விழுந்து லாரியில் சிக்கி பலியான சம்பவம் அனைவரது மனதையும் வேதனைப்படுத்தி உள்ளது. சென்னையில் ‘பேனர்’ சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியானதை தொடர்ந்து, மெத்தன போக்குடன் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, உங்களுக்கு இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பியது.  பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ, பெற்றோருக்கு ஒரே மகள். அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதால், அந்த இளம்பெண் பலியாகி உள்ளார். 

இது அந்த பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாது பெரும் இழப்பாகும். இருந்தாலும், அவரது பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை, தவறு செய்த, கடமையை செய்ய தவறிய, பணியில் மெத்தனமாக இருந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து தமிழக அரசு பிடித்தம் செய்ய வேண்டும். சுபஸ்ரீ பலியான சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசாரும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசாரும் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளின் புலன் விசாரணை சென்னை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

சட்டவிரோத பேனர்களை தடுக்காத அதிகாரிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை அதிகாரிகள் வருகிற 25-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். சென்னையில் பேனர் சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தின் எதிரொலியாக பேனர் கலாச்சாரத்தை தவிர்க்க அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சி ஒன்றிற்கு அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியும், செல்லூர் ராஜுவும் சென்றிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சிக்காக வருகை தரும் அவர்களுக்கு தொண்டர்கள்  வாழ்த்தி பேனர்கள் வைத்திருந்தனர். இதை பார்த்த ராஜேந்திர பாலாஜியும், செல்லூர் ராஜுவும் பேனர்களை நீக்கினால் தான் நாங்கள் நிகழ்ச்சிக்கு வருவோம் என்று கூறி ஓரமாக அமர்ந்து விட்டனர். அதன்பின் தொண்டர்கள் பேனர்களை உடனடியாக அகற்றினர். அதன்பின் அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest CakesThoothukudi Business Directory