» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எப்படியாவது இந்தியை திணித்துவிட மத்திய அரசு முயற்சி- அமித்ஷா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

சனி 14, செப்டம்பர் 2019 11:22:32 AM (IST)

எந்த பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட மத்திய அரசு முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்தி தினத்தையொட்டி பாஜக தலைவர் அமித் ஷா "ஒரே நாடு ஒரே மொழி” என்ற அடிப்படையில் வெளியிட்டுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்றும் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பாஜக தலைவரின் இந்த கருத்து, இந்தியை திணிக்க முயற்சி செய்யும் வகையில் இருப்பதாக பல்வேறு தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பல முயற்சி செய்து தமிழகத்தில் இந்தியை நுழைக்க பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes
Thoothukudi Business Directory