» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

சனி 14, செப்டம்பர் 2019 10:46:20 AM (IST)



நீராதார பகுதிகளில் பெய்த மழை காரணமாக, குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில், குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர்வரத்து குறைந்தது மேலும்  குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.இந்த நிலையில், குற்றால அருவிகளில் நீராதாரமான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மழை பெய்ததால் குற்றாலத்தில், ஐந்தருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சனி, ஞாயிறு என 2 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதனால், குற்றால வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory