» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு மறு விசாரணை: ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை

வெள்ளி 13, செப்டம்பர் 2019 4:35:14 PM (IST)



தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டனர். 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கில் நடந்த தேசிய மனித உரிமை ஆணைய கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் ஒருங்கிணைப்பாளர் பேரா.பாத்திமா பாபு தலைமையில் பங்கேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை துன்புறுத்தும் காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டனர். மேலும், மே 22 துப்பாக்கி சூடு சம்பந்தமான வழக்கை மீண்டும் கையில் எடுத்து மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam




Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory