» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேனர் விழுந்து இளம்பெண் பலியாக அதிகாரிகளின் மெத்தனமே காரணம்: உயர் நீதிமன்றம் கண்டனம்
வெள்ளி 13, செப்டம்பர் 2019 12:18:44 PM (IST)
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்த முறையீட்டின் போது, அதிகாரிகளின் மெத்தனமே பேனர் பலிக்குக் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவையொட்டி அனுமதியின்றி ரேடியல் சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு பேனர்தான் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், விதிமீறலில் ஈடுபட்டு பேனர் வைத்ததன் மூலம் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
விதிமீறி பேனர்கள் வைப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்பு, சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற பெண் மீது பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அப்பெண் மரணம் அடைந்தது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதி மீறி பேனர் வைப்பது நீடிக்கிறது. உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தந்தால் போதும் என்று அரசு கருதுவதே காரணம். சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கேக் காரணம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திக்குறிச்சி கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு : பெண் உட்பட நான்கு பேர் கைது
வியாழன் 5, டிசம்பர் 2019 7:42:36 PM (IST)

இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ரயில்கள் மேல்மருவத்தூரில் ரயில்கள் நின்று செல்லும்
வியாழன் 5, டிசம்பர் 2019 4:50:50 PM (IST)

மெரீனாவை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றுக: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 5, டிசம்பர் 2019 4:11:56 PM (IST)

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க மாநில ஆணையம் ஒப்புதல்
வியாழன் 5, டிசம்பர் 2019 3:56:09 PM (IST)

ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர், ஜெ.தீபா மரியாதை
வியாழன் 5, டிசம்பர் 2019 3:22:57 PM (IST)

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர்!
வியாழன் 5, டிசம்பர் 2019 12:26:24 PM (IST)
