» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜாமீனில் சென்றவருடன் சேர்ந்து மது அருந்திய மத்திய சிறை அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

வெள்ளி 13, செப்டம்பர் 2019 9:07:30 AM (IST)

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே சென்றவருடன் சேர்ந்து நட்சத்திர ஓட்டலில் மது அருந்திய மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மற்றும் 2 தலைமை சிறை காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

மதுரையில் ஒரு வழக்கு தொடர்பாக முத்துக்கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் அவருடன் சேர்ந்து மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் முனியாண்டி, தலைமை சிறை காவலர்கள் மணி, மூர்த்தி ஆகியோர் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் மது அருந்தியதாக சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவுக்கும் தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து விசாரணை நடத்தினார். அதில் உதவி ஜெயிலர் மற்றும் தலைமை சிறை காவலர்கள் 2 பேரும், ஜாமீனில் வெளியே சென்றவருடன் சேர்ந்து ஓட்டலில் மது அருந்தியது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே உதவி ஜெயிலர் முனியாண்டி, தலைமை சிறை காவலர்கள் மணி, மூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறை சூப்பிரண்டு ஊர்மிளா நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் சிறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications



Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory