» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. பிரமுகர் வீட்டில் 22 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை ; கன்னியாகுமரியில் துணிகரம்

வியாழன் 12, செப்டம்பர் 2019 11:18:15 AM (IST)

கன்னியாகுமரியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 22 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள பூங்குளத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஆர்.எல். ராஜா என்ற ராஜபாண்டியன் (60). தி.மு.க.பிரமுகர். கடந்த சில மாதங்களாக ராஜபாண்டியன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த 4-ந்தேதி வேலூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர், அவர் அங்கு சிகிச்சை முடித்து பெங்களூருவில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், அப்பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் தினமும் ராஜபாண்டியன் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையிலும் உறவினர் வழக்கம் போல் வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி ராஜபாண்டியனுக்கும், கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டியன் பெங்களூருவில் இருந்து விரைந்து வந்தார். வீட்டுக்கு சென்று பார்த்த போது, அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. படுக்கை அறையில் பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. அதில் இருந்த 22 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த கைகெடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இதுபற்றி ராஜபாண்டியன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைளை பதிவு செய்தனர். துப்புதுலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடிவருகிறார்கள். வீட்டில் யாரும் இல்லாததை நன்கு நோட்டமிட்ட மர்ம நபர்கள் நிதானமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். மேலும், ராஜபாண்டியன் வீட்டில் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் வீட்டின் பின் பக்க கேமராவை வேறு பக்கத்தில் திருப்பி விட்டு உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், அவர்கள் கேமராவில் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளை அடித்து சென்றனர். இதனால், கேமராவில் பதிவான காட்சிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
CSC Computer Education


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu CommunicationsThoothukudi Business Directory