» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல் 2 மனைவிகளுக்கும் தெரியாமல் 3வது திருமணம் செய்ய முயற்சி: வாலிபருக்கு தர்ம அடி!!
புதன் 11, செப்டம்பர் 2019 4:13:54 PM (IST)
சூலூர் அருகே முதல் 2 மனைவிகளுக்கும் தெரியாமல் 3-வது திருமணத்திற்கு முயன்ற வாலிபரை முதல் 2 மனைவிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அந்த வாலிபர், சூலூர் நேரு நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரங்க அரவிந்த் தினேஷ் (30) என்பதும், அவர், தனது முதல் 2 மனைவிகளுக்கும் தெரியாமல் 3-வதாக ஒரு திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம் அடைந்து சரமாரியாக தாக்கியதும் தெரிய வந்தது.இது குறித்து அரங்க அரவிந்த் தினேஷின் முதல் மனைவி பிரியதர்ஷினி கூறியதாவது: கடந்த 2018-ம் ஆண்டு எனக்கும் அரங்க அரவிந்த் தினேசுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே எனது கணவரும், அவரது வீட்டில் உள்ளவர்களும் என்னை கொடுமைப்படுத்தினர். எனது கணவரும், அவருடைய தந்தையும் சேர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.
மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி அடித்து உதைத்தனர். இதனால் எனது வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டது. இதனால் நான் அவரை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.இதனிடையே எனக்கு தெரியாமல் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து எனக்கு சில நாட்களுக்கு முன்புதான் தகவல் தெரிந்தது.
2-வதாக திருமணம் செய்த பெண்ணிடம், முதலில் திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். நான் அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவரும் எனது கணவரிடம் மிகுந்த கொடுமைகளை அனுபவிப்பது தெரியவந்தது.இதனிடையே எனது கணவர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வந்தார். அதற்காக அவர் பெண் தேடி வந்தார். இதை தெரிந்து கொண்ட நான், அனுப்பிரியா மற்றும் எங்களது உறவினர்களுடன், எனது கணவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று கேட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் கூறும்போது, இருதரப்பினரும் புகார் கொடுத்து உள்ளனர். இருவரது திருமணமும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே திருப்பூர் அல்லது போத்தனூர் மகளிர் காவல் நிலையம் ஆகிய ஏதாவது ஒன்றில் புகார் அளிக்கும்படி இருதரப்பினரையும் அறிவுறுத்தி உள்ளோம் என்றார். இது குறித்து பிரியதர்ஷினி மற்றும் அவரது உறவினர்கள் கூறுகையில், ஏற்கனவே திருப்பூர் மற்றும் போத்தனூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பல மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். எனவே கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:46:19 PM (IST)

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: கமல்ஹாசன் தகவல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:35:43 PM (IST)

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின் பார்வையிடடனர்!
வெள்ளி 15, ஜனவரி 2021 10:00:07 AM (IST)

பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா: ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஆசியுரை
புதன் 13, ஜனவரி 2021 11:36:34 PM (IST)

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை உட்பட 7 இடங்களில் அகழாய்வு பணி: தொல்லியல் துறை
புதன் 13, ஜனவரி 2021 4:48:56 PM (IST)

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)
