» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெள்ளை அறிக்கை வெளியிட்டால் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார் : ஸ்டாலின்
செவ்வாய் 10, செப்டம்பர் 2019 8:16:31 PM (IST)
உலக முதலீட்டாள்ர்கள் மாநாடுகளின் மூலம், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட்டால், அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக தெரிலித்துள்ளார்.

இப்போது முதல்வரின் 13 நாள்கள் வெளிநாட்டு பயணத்தில் போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை.அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன? அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு - செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை? அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக முதல்வர் வெளியிடத் தயாரா?
அப்படி உண்மைகளை வெளியிட்டால், முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? என ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:46:19 PM (IST)

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: கமல்ஹாசன் தகவல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:35:43 PM (IST)

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின் பார்வையிடடனர்!
வெள்ளி 15, ஜனவரி 2021 10:00:07 AM (IST)

பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா: ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஆசியுரை
புதன் 13, ஜனவரி 2021 11:36:34 PM (IST)

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை உட்பட 7 இடங்களில் அகழாய்வு பணி: தொல்லியல் துறை
புதன் 13, ஜனவரி 2021 4:48:56 PM (IST)

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)
