» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொள்முதல் ஊழலை தடுத்தாலே பால் விலை உயர்வை தவிர்க்கலாம்: டிடிவி.தினகரன் பேட்டி

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:33:02 PM (IST)

தமிழக அரசு பால் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழக அரசு பால் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் மற்ற அத்தியாவசிய பொருட்களும் விலை உயரும். எனவே தமிழக அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம். மத்திய- மாநில அரசுகளுக்கு விவசாயிகள் மீது எந்த அக்கறையும் இல்லை. அ.தி.மு.க. அரசு தங்களை காப்பாற்றி கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. தற்போது இருக்கிற ஆட்சியாளர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறுவார்கள்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மாநில அரசின் உதவியோடு மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விளை நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல் படுத்தாமல், அந்த திட்டங்களை யாரையும் பாதிக்காத வண்ணம் கடல் பகுதிகளில் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.அரசியலில் வெற்றி- தோல்வி என்பது சகஜம்தான். குறிப்பாக எங்கள் தொண்டர்கள் யானை பலத்தில்தான் இருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை காட்டுவோம்.இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.


மக்கள் கருத்து

அருண்Aug 19, 2019 - 07:56:56 AM | Posted IP 162.1*****

சும்மா பேசனும்னு பேச கூடாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Anbu Communications
Thoothukudi Business Directory