» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 10:09:44 AM (IST)

தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை கோவிலம்பாக்கத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,  வரும் ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.லாரிகள் சிறைப்பிடிப்பு, லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவது ஆகியவற்றைக்  கண்டித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education






Thoothukudi Business Directory