» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளநோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கும்பல் : மூன்று பேர் கைது

சனி 17, ஆகஸ்ட் 2019 7:54:46 PM (IST)

நாகர்கோவிலில் ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட அரசு ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் பள்ளி விளையைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு செட்டிக்குளம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றார். அப்போது அவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் எடுத்தார். அந்த ரூபாய் நோட்டின் மீது தியேட்டர் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதுதொடர்பாக கோட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரமேஷ், டிக்கெட் எடுக்க கொடுத்த ரூ.2 ஆயிரம் நோட்டு கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதாக அவர் தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் இந்த விஷயத்தில் வாட்டர் டேங்க் ரோடு கேசரி தெருவைச் சேர்ந்த தினகரன் (43), பள்ளிவிளையைச் சேர்ந்த ஜோசப் மெனோவா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.கள்ள நோட்டு விவகாரத்தில் கைதான தினகரன், ரமேஷ், ஜோசப் மெனோவா உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். ஜெராக்ஸ் எந்திரம் மூலம் எவ்வளவு கள்ளநோட்டு அச்சடித்தார்கள், அவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education





Black Forest Cakes



Thoothukudi Business Directory