» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினிகாந்த்: கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை!
புதன் 14, ஆகஸ்ட் 2019 10:27:14 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை!அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா வைபவம் நிறைவுபெற இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ளநிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அலைமோதுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த ரஜினியைக் கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள் கையசைத்து ஆரவாரம் செய்தனர்.
அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அத்திவரதரின் சிறப்புகளை விளக்கி கூறி சிறப்பு பூஜைகளை செய்தனர். அத்திவரதரை மனைவி லதாவுடன் தரிசித்தார் ரஜினிகாந்த். கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதையும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அவரது சார்பில் சுவாமிக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் பக்தர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். ரஜினிகாந்த் வருகையையொட்டி நள்ளிரவு நேரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் : தமிழக அரசு திட்டம்
சனி 14, டிசம்பர் 2019 5:31:20 PM (IST)

பாட்டியை கொன்றுவிட்டு பேத்தியை கடத்த முயற்சி: ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்
சனி 14, டிசம்பர் 2019 5:24:00 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுகதான் : அமைச்சருக்கு ஸ்டாலின் பதிலடி!!
சனி 14, டிசம்பர் 2019 3:43:50 PM (IST)

நகைக்கடை அதிபர் வீட்டில் 1 கிலோ தங்கம், வைரம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
சனி 14, டிசம்பர் 2019 12:43:09 PM (IST)

7பேர் விடுதலையில் முடிவெடுக்காத ஆளுநரை நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
சனி 14, டிசம்பர் 2019 12:22:51 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் வடமாநில முதியவர் கைது
சனி 14, டிசம்பர் 2019 10:26:18 AM (IST)
