» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சியர் திட்டிய விவகாரம்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 3:34:42 PM (IST)

அத்திவரதர் தரிசன பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் ஆய்வாளரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திட்டிய விவகாரத்தை தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.

அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் நிகழ்வு கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி அன்று தொடங்கியது. 48 நாட்கள் நடக்கும் நிகழ்வில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் வரை குவிவதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் மிகுந்த சிரமப்பட்டு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு உதவும் விதம் ஆகியவை பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. பொதுமக்கள் தரிசிக்க ஒரு வழியும், விஐபிக்கள் தரிசிக்க மற்ற வழியும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட நிர்வாகம் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதுவரை 70 லட்சம் பேர் அத்தி வரதரைத் தரிசித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க முடிந்தது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, இந்நிலையில் கடந்தவாரம் காணொலிக் காட்சி ஒன்று வைரலானது. அதில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளரைக் கடுமையாக ஒருமையில் திட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

இது காவலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் இந்த நிகழ்வு விமர்சிக்கப்பட்டது. ஊடகங்களிலும் இதுகுறித்த செய்தி வெளியானது. இதனால் நேற்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தன்னிலை விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து 2 வாரங்களில் தகுந்த விளக்கம் அளிக்க தலைமைச் செயலர், காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory