» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரம்: மத்திய பாஜக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 5:29:09 PM (IST)

பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் எஸ்.சி / எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டாரகள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சிபிஎஸ்சி தேர்வுக் கட்டணத்தை எஸ்/ எஸ்டி  மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது! நீட், நெக்ஸ்ட், new education policy வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிAug 17, 2019 - 06:27:27 PM | Posted IP 108.1*****

அதிக பணம் செலவு செய்து இதுபோன்ற கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்வது எப்படி பொருத்தும் சார் - லட்ச கணக்கில் செலவு செய்து இடம் வாங்குகிறார்கள் - இந்த உயர்வு ஒரு பொருட்டல்ல

samiAug 12, 2019 - 06:55:06 PM | Posted IP 162.1*****

சம்பந்தப்பட்ட துறை தலைவரை விட்டுவிட்டு - மோடி அரசை பழிப்பானேன் - அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


CSC Computer EducationThoothukudi Business Directory