» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்
திங்கள் 12, ஆகஸ்ட் 2019 4:24:13 PM (IST)
அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு என ஏராளமான பணிச்சுமைகளைக் கொண்டிருக்கும் காவல்துறையினர் கூடுதல் பொறுப்பாகவே இத்தகையக் காவல்பணியில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்களை மிக மோசமாக நடத்திப் பொதுமக்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல! காவல்துறையினர் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்க முடியாவண்ணம் எந்தளவுக்கு அதிகார அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே மிகச் சிறந்தச் சான்றாகும். இத்தகைய அதிகார வரம்பு மீறல்களையும், பழிவாங்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாகக் களைய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.
மண்ணின் நலனுக்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறையினரைப் பணிசெய்ய விடாது தடுத்ததாகக் கூறி பொய் வழக்குத் தொடுக்கும் தமிழக அரசு, காவல்துறையினருக்கு எதிரானக் காஞ்சி மாவட்ட ஆட்சியரின் இச்செயலை அனுமதிப்பது மிக மோசமான நிர்வாகச் சீர்கேட்டுக்கே வழிவகுக்கும். ஆகவே, காவல்துறையினரை மிரட்டிப் பணிசெய்ய விடாது தடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மெய்யன்Aug 13, 2019 - 12:46:35 AM | Posted IP 162.1*****
அடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி. நீங்கல்லாம் ஒருமை பேச்சை பற்றி பேசலாமா. சாத்தான் எப்படி பாவேதம் ஓதலாம்
samiAug 12, 2019 - 07:02:41 PM | Posted IP 108.1*****
மாவட்ட நிர்வாக அதிகாரிக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவே நினைக்கிறேன்
samiAug 12, 2019 - 07:01:39 PM | Posted IP 108.1*****
இதில் தலையிட நீங்கள் யார் - மேடையிலும் சரி - தொலைகாட்சி விவாதங்களிலும் சரி - பிரதமர் உட்பட எவரையும் ஒருமையில் முகம்சுளிக்கவைக்கும் தமிழில் பேசும் உங்களை முதலில் கைது செய்ய வேண்டும்
நிஹாAug 12, 2019 - 06:11:52 PM | Posted IP 162.1*****
தனக்கு தேவையானவர்களை குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அனுப்பிய காவலர்களை என்ன செய்ய வேண்டும்?
மேலும் தொடரும் செய்திகள்

திக்குறிச்சி கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு : பெண் உட்பட நான்கு பேர் கைது
வியாழன் 5, டிசம்பர் 2019 7:42:36 PM (IST)

இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ரயில்கள் மேல்மருவத்தூரில் ரயில்கள் நின்று செல்லும்
வியாழன் 5, டிசம்பர் 2019 4:50:50 PM (IST)

மெரீனாவை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றுக: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 5, டிசம்பர் 2019 4:11:56 PM (IST)

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க மாநில ஆணையம் ஒப்புதல்
வியாழன் 5, டிசம்பர் 2019 3:56:09 PM (IST)

ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர், ஜெ.தீபா மரியாதை
வியாழன் 5, டிசம்பர் 2019 3:22:57 PM (IST)

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர்!
வியாழன் 5, டிசம்பர் 2019 12:26:24 PM (IST)

ஒரு பையன்Aug 13, 2019 - 12:34:59 PM | Posted IP 162.1*****