» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தங்கப்பதக்கம் வென்ற அனுராதாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளி 19, ஜூலை 2019 8:26:44 PM (IST)

2019 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்ணாக தங்கம் வென்றுள்ள அனுராதாவுக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தஅனுராதா 2019 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்மனியாக தங்கம் வென்றுள்ளார்.

87கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்துகொண்டு ஸ்னாச் முறையில் 100 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 121 கிலோ என்ற நிலையில் மொத்தம் 221 எடை தூக்கி தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். அவருக்கு, என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications






Thoothukudi Business Directory