» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதியதாக 2 மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் : தமாகா தலைவர் ஜிகே வாசன் பேட்டி

வெள்ளி 19, ஜூலை 2019 6:05:36 PM (IST)

புதியதாக 2 மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களுக்கு பொது மக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நீர் வளத்தை காக்க துணை நிற்க வேண்டும்.நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு எனவும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுபோல தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டமும், வேலூரை பிரித்து புதிய மாவட்டமும் உருவாக்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest CakesAnbu Communications


CSC Computer EducationThoothukudi Business Directory