» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொன்.மாணிக்கவேலுக்கு அரசு உதவவில்லை: திமுக குற்றச்சாட்டு - பேரவையில் முதல்வர் பதில்

வெள்ளி 19, ஜூலை 2019 4:55:17 PM (IST)

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அரசு உதவவில்லை என திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார்.

மதுக்கடைக்கு எதிராக போராட சென்ற நந்தினி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்று ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார். வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்க போலீஸ் அதிகாரி முயன்ற போதும் அரசு உதவவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு பல அதிகாரிகளை உதவிக்காக அரசு நியமித்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பொன் மாணிக்கவேலுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்று முதல்வர் தெரிவித்தார். பொன் மாணிக்கவேல் 2012ஆம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் நீடிக்கிறார். சிலை கடத்தல் பிரிவில் 33 வழக்குகள் மட்டுமே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் முதல்வர் பேசினார். ஆண்டுக்கு சராசரியாக 4 வழக்குகள் தான் பதிவாகி உள்ளன - 7 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது என்றும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

குட்கா, புகையிலை பொருள் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி முதல்வர் பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி பற்றி பல விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் சொன்னால் சர்ச்சையாகிவிடும் என்று முதல்வர் தெரிவித்தார். சிபிஐ விசாரணைக்கு பல வழக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஐ.பெரியசாமி(திமுக) பேசியதற்கு எடப்பாடி பதிலளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை படிக்காமலேயே நீதிமன்றம் சிபிஐ-க்கு விசாரணையை மாற்றியுள்ளது என்று முதலவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory