» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வசனங்கள்: நடிகர் சந்தானம் மீது பழநி டி.எஸ்.பி.யிடம் புகார்

வெள்ளி 19, ஜூலை 2019 3:32:38 PM (IST)

சந்தானம் நடித்துள்ள ஏ 1  படத்தின் டீசரில் பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் உள்ளதாக பழநி டி.எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சந்தானம் கதாநாய கனாக நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ஏ 1 (அக்யூஸ்ட் நம்பர் 1). இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம் பெற்றுள் ளதாகவும், அதற்காக நடிகர் சந்தானம் உட்பட படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து தலைமையில் பழநி டி.எஸ்.பி. விவேகானந்தனிடம் மனு அளித் தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி மாநிலத் தலைவர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் டி.எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து, இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் ஆகியோர் கூறியதாவது: நடிகர் சந்தானம் நடித்து வெளியாக வுள்ள ஏ1 படத்தின் டீசரில் பிராமணர் சமூகம் பற்றியும், பிராமணப் பெண்கள் பற்றியும் அவதூறான வசனம் இடம் பெற்றுள்ளது. சர்சைக்குரிய வசனங்களை உடனே நீக்க வேண்டும்.தமிழ்நாடு திரைப்பட தணிக்கைக் குழு மறு தணிக்கை செய்யவேண்டும். நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக் குழுவினர் மீதான புகாரை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், காவல் துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்ப உள்ளோம் என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory