» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றால அருவிகளில் வெள்ளம், குளிக்கத் தடை : சுற்றுலாபயணிகள் ஏமாற்றம்

வெள்ளி 19, ஜூலை 2019 12:24:33 PM (IST)



பிரசித்தி பெற்ற குற்றால அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

குற்றாலம் பகுதிகளில் நேற்று காலை முதல் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை தொடர்ந்து பெய்தது குற்றாலம் மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று மாலையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் இன்று காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் மெயின் அருவி ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும் ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரையில் குற்றாலத்தில் தேவையான அளவுக்கு மழை பெய்யவில்லை இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது ஆனாலும் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவு தண்ணீரிலும்  வரிசையில் நின்று குளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் குறைந்தது குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை தொடர்ந்து பெய்தது.இதனால் குற்றாலம் தென்காசி பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது குற்றாலம் மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்த சாரல்மழையால் நேற்று மாலை 5 மணி அளவில் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது அதனைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.தொடர்ந்து குற்றாலம் மலைப் பகுதியில் மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி அருவிகளில் இன்று அதிகாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இதனால் மெயின் அருவி ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குற்றாலத்தில் சாரல் இல்லை அருவிகளில் தண்ணீர் இல்லாமல் ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள், மற்றும் வியாபாரிகள், இன்று அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தடைவிதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam

CSC Computer Education





Thoothukudi Business Directory