» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பணிகளுக்கு குறைந்தபட்ச - அதிக பட்ச கல்வித் தகுதி நிர்ணயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 11, ஜூலை 2019 3:25:17 PM (IST)

குரூப்-3, குரூப்- 4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் கல்வித்தகுதியை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரைக்  கிளை உத்தரவிட்டுள்ளது. 

கூடுதல் கல்வித்தகுதி என கூறி நிராகரிக்கப்பட்ட பணியை தனக்கு வழங்க கோரி சக்கரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, குரூப்-3, குரூப்-4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய அரசின் நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இதன் மூலம் தகுதியுடைய நபர்கள் பொதுத்துறைகளில் தேர்வாக வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்தது. 

அதுமட்டுமின்றி, அடிப்படை அரசுப்பணிகளுக்கு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்கள் முறையாக பணியாற்றுவது இல்லை எனவும் நீதிமன்றம் அதில் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer EducationAnbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory