» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது நளினி சிதம்பரம் தான்: பேரவையில் முதல்வர் கேள்வி

புதன் 10, ஜூலை 2019 5:07:36 PM (IST)

நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது நளினி சிதம்பரம் தான். இதற்கு முதலில் பதில் கூறுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது. நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு பற்றி அமைச்சர் சி.வி.சண்முகம் தவறான தகவல் அளித்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியதாவது: நீட் விவகாரத்தில் நான் எந்த தவறான தகவலும் கூறவில்லை. நான் ராஜினாமா செய்யத் தயார், எதிர்கட்சி தலைவர் ராஜினாமா செய்யத் தயாரா? என்றார்.

நீட் மசோதா விவகாரத்தில் அமைச்சர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. நீட் தேர்வு தொடர்பான பேரவை விவாதங்களின் போது பதில் அளிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

நீட் தேர்வு மசோதா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசும் போது, நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் . நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானங்கள் குறித்து குடியரசு தலைவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என கூறினார்.

நீட் தேர்வு மசோதா குறித்து சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசையும் அணுகுகிறோம், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கிறோம். நீட் தேர்வு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது நளினி சிதம்பரம் தான். இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.


மக்கள் கருத்து

சாமிJul 11, 2019 - 11:20:30 AM | Posted IP 108.1*****

காங்கிகள் என்ன சொல்கிறார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

Thoothukudi Business Directory