» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு: மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி

புதன் 12, ஜூன் 2019 5:38:27 PM (IST)



திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று (ஜூன் 12) அவரை சந்தித்த நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அப்போது செய்தி மற்றும் விளம்பர தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடனிருந்தார். இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (12.6.2019) திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராதாரவி நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுவரை அதிமுகவில் இருந்துவந்த நடிகர் ராதாரவி, அதன்பிறகு கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதால், கடந்த 2017 பிப்ரவரி மாதம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து திமுகவின் பல மேடைகளில் பேசிவந்தார். அவரின் பேச்சுக்கள் சர்ச்சையையும் கிளப்பின. கடந்த மார்ச் மாதம் கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes




Thoothukudi Business Directory