» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த நிதின் கட்கரி அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி நன்றி

ஞாயிறு 26, மே 2019 8:34:46 PM (IST)

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

16-வது மக்களவையில் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் வழிப் போக்கு வரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் நிதின் கட்கரி.  அண்மையில் நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில், செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டி அளித்த நிதின் கட்கரி, மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றவுடன், கோதாவரி- கிருஷ்ணா- காவிரி நதிகளை இணைக்கும் திட்டமே முதல் பணியாக இருக்கும்.

நதிகள் இணைப்பு திட்டத்தால் தமிழகத்துக்கு நீரைக் கொண்டு சேர்க்க முடியும் என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்து அதன் மூலம் காவிரிக்கு நீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், இந்தத் திட்டம் குறித்து இப்போது நிதின் கட்கரியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. நிதின் கட்கரியின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்காத நிலையில், கோதாவரி- கிருஷ்ணா இணைப்புத் திட்டம் மூலம் தமிழகத்துக்கு போதிய நீரைக் கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டரில், கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பால் தமிழ்நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை தீரும். இக்கட்டான சூழலில் இந்தத் திட்டம் தமிழகத்துக்கு அவசியம் தேவை. நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்ததற்கு இதயப்பூர்வமான நன்றி இவ்வாறு டுவிட்டரில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory