» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வருவார் என எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்: வைகோ

சனி 25, மே 2019 5:28:46 PM (IST)

அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தி.மு.க. 3-வது இடத்தை பெற்று இருக்கிறது. தலைமை ஆளுமை என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். தமிழக நலன்களை தி.மு.க. காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். திராவிட கோட்டைக்குள் பா.ஜனதாவால் நுழைய முடியவில்லை, அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். 

ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்து இருக்கிறார். தி.மு.க. கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆளும் கட்சியின் அறை கூவலுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர். நியூட்ரினோ, மேகதாது அணை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக தி.மு.க. கூட்டணி இருக்கும் என கூறினார்.


மக்கள் கருத்து

செல்வகணபதிமே 26, 2019 - 12:35:53 AM | Posted IP 162.1*****

தளபதியாரின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.

சாமிமே 25, 2019 - 07:05:58 PM | Posted IP 108.1*****

கடந்தமுறை - கேப்டன் விசயகாந்து - இந்த முறை - பப்பு - சார் வச்ச குறி தப்பாது - அப்புறம் - சட்டசபைக்கு சுடலைக்கு ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory