» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை: மனைவி கைது - கள்ளக்காதலனுக்கு வலை!!

சனி 25, மே 2019 5:01:47 PM (IST)

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டை அருகே உள்ள மேல் வயலாமூரை சேர்ந்தவர் காசி மகன் குணசேகரன் (45), விவசாயி. இவருக்கு காந்திமதி(38) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். காந்திமதி அதே ஊரை சேர்ந்த கார்த்திகேயன் என்னும் 30 வயது வாலிபருடன் கள்ளத்தொடர்பில் உள்ளதாக குணசேகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  

இது தொடர்பாக கடந்த 16-ம் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காந்திமதி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையறிந்த குணசேகரனின் அண்ணன் சேட்டு காந்திமதியை சந்தித்து சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி கடந்த 20-ம் தேதி அழைத்து வந்தார். இந்நிலையில், இது தொடர்பாக மீண்டும் காந்திமதிக்கும் அவரது கணவர் குணசேகரனுக்கும் நேற்று இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது ஆத்திரமடைந்த காந்திமதி தூங்கிக்கொண்டிருந்த கணவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக உடனே அவலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவி காந்திமதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தங்களது உறவுக்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வந்த குணசேகரனை காந்திமதியும், கார்த்திகேயனும் சேர்ந்து நேற்றுஅதிகாலை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தலைமறைவான கார்த்திகேயனைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory