» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திண்டிவனத்தில் அதிமுக நிர்வாகி வீட்டில் ஏசி வெடித்து விபத்து 3 பேர் பரிதாப சாவு

புதன் 15, மே 2019 5:53:43 PM (IST)

திண்டிவனம் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் ஏசி வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உட்பட 3பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், காவேரி பாக்கம் சுப்புராய பிள்ளை வீதியை சேர்ந்தவர் ராஜூ (60). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி கலைச்செல்வி (55). இவர்களுக்கு கோவர்த்தனன் (30), கவுதமன் (26) என்ற இரு மகன்கள் உள்ளனர். கோவர்த்தனன், அதிமுக நகர மாணவர் அணி தலைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகியுள்ளது. கவுதமன், கார் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். 

நேற்று( மே14) இரவு வீட்டில் ஏசி இல்லாத அறையில் கோவர்த்தனன், மனைவி காயத்ரி தூங்கி கொண்டிருந்தனர்.  ஏசி இருந்த அறையில் ராஜூ, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஏசி வெடித்து தீப்பிடித்தது . இதில் தூங்கி கொண்டிருந்த 3 பேர் மீதும் தீ பரவியது. இதில், வீட்டை விட்டு அலறியபடியே வந்து ராஜூ வாசலில் உயிரிழந்தார். மகன் கவுதமன் ஹாலில் தீயில் கருகி உயிரிழந்தார். அறையிலேயே கலைச்செல்வி தீயில் கருதி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஏசி வாங்கி 6 வருடங்கள் ஆகின்றன. இதில் ஒரு முறைதான் சர்வீஸ் செய்துள்ளனர். மற்றபடி சர்வீஸ் செய்யவில்லை. இதனால், விபத்து ஏற்பட்டிருக்கலாம், சதி செயல் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Joseph Marketing


Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam

New Shape Tailors
Thoothukudi Business Directory