» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு

புதன் 15, மே 2019 5:35:12 PM (IST)

ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான டெட் (Teachers Eligibility Test) என்ற ஆசிரியர் தகுதி தேர்விற்காக அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 28-2-2019 அன்று தேதி வெளியிட்டது. www.trb.tn.nic.in என்ற தளத்தில் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைதளம் சரிவர இயங்காததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என புகார் தெரிவித்தனர். 
 
இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதியில் இருந்து 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. 8-ம் தேதி முதல்தாள் மற்றும் 9-ம் தேதி இரண்டாம்தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013 மற்றும் 2017ல் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டுக்கான (2018) தேர்வு நீதிமன்ற வழக்கு காரணமாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam PasumaiyagamCSC Computer Education

Black Forest Cakes
Thoothukudi Business Directory