» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க பராமரிப்பற்ற சாலைகளே காரணம்: உயர்நீதிமன்றம் கண்டனம்

செவ்வாய் 14, மே 2019 12:38:09 PM (IST)

தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க பராமரிப்பற்ற  சாலைகளே காரணம் என  உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

சாலை விபத்தில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், 1998ல் ஏற்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், 25 ஆண்டுக்கு மேலாகியும்  திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும்.

விதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாதது, முறையாக பராமரிக்காத சாலைகள் ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகரிக்கின்றன என தெரிவித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

நிஹாமே 15, 2019 - 12:51:54 PM | Posted IP 162.1*****

இந்த முறை ஹெல்மெட்டை விட்டுட்டீங்களே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications




Black Forest Cakes




Thoothukudi Business Directory