» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 709 தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 5:51:53 PM (IST)

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாத 709 தனியார் பள்ளிகளில்  மாணவர் சேர்க்கை நடத்தத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 4,500க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வருகிறது.  இவற்றில் பல பள்ளிகள் உரிய அங்கீகாரமன்றி செயல்பட்டு வருவது தொடர்பாக பல்வேறு புகார்கள் அவ்வப்போது கூறப்பட்டு வந்தன. இதனால் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையை மாற்றவும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைக் கண்டுபிடித்து அதில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினைத் தடுக்கும் பொருட்டு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் குறித்து கண்டறிய பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடந்த 9-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.  ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அதில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைக் கண்டறிந்து சம்பந்தபட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

நாளைக்குள் அந்தப் பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  விளக்கம் அளிக்கத் தவறும்  பள்ளிகள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளாக முடிவெடுக்கப்பட்டு, அந்தப் பள்ளிகள் குறித்து  நாளிதழ்களில் விளம்பரம் செய்திடவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வெளியே இந்தப் பள்ளி அங்கீகாரம் இல்லாத பள்ளி என்கிற பதாகை வைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில்106 பள்ளிகள், திருப்பூரில் 86 பள்ளிகள், சேலத்தில் 53 பள்ளிகள், திருவள்ளூரில் 48 பள்ளிகள், சென்னையில் 7 பள்ளிகள் உட்பட 709 பள்ளிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

கர்ணராஜ்Apr 24, 2019 - 01:57:22 PM | Posted IP 162.1*****

சாமானியன் சொன்னது சரி. லிஸ்ட் வெளியிட வேண்டும்.

உண்மைApr 24, 2019 - 12:23:46 PM | Posted IP 162.1*****

சாமானியன் சொல்வது சரி..

சாமிApr 24, 2019 - 10:28:59 AM | Posted IP 172.6*****

எந்த பள்ளியாக இருந்தாலும் - தரமான கல்வி தரப்படவேண்டும் - தரம் என்றால் என்ன - நேர்முக தேர்வில் இன்றைய மாணவர்களின் அனுபவத்தை கேளுங்கள் - தெரியும்

ஒருவன்Apr 24, 2019 - 09:41:43 AM | Posted IP 162.1*****

தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளியே சிறந்தது ...

சாமான்யன்Apr 23, 2019 - 09:12:50 PM | Posted IP 162.1*****

லிஸ்ட் வெளியிடுங்க நாதாரிங்களா? இந்த பூச்சாண்டி எல்லாம் இலாகா பொறுக்கிகள் சம்பாதிக்கவே! இது ஆண்டு தோறும் நடைபெறும் விளையாட்டு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

Joseph Marketing

New Shape Tailors

Anbu Communications


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory