» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட உமாசங்கர் ஐஏஎஸ்: தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 5:31:27 PM (IST)

மத்தியப் பிரதேசத்தில் மத பிரசாரத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து உமாசங்கர் ஐஏஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தைச் சார்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான உமா சங்கர் ஐஏஎஸ் தனது கிறிஸ்துவ பக்தியின் காரணமாக மீண்டுமொரு முறை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார். 2019ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உமாசங்கர் ஐஏஎஸ் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் . 

சிதி தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த உமாசங்கர், அங்கேயும் தனது மதபோதனைகளைத் துவக்கி ஃபெயித் ஹீலிங் வேலைகளையும் தொடங்கவே உடனடியாக தேர்தல் ஆணையம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேற்றியதோடு மீண்டும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பியுள்ளது.

தனது தலைவலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சிதியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் உமாசங்கர் ஐஏஎஸ். தனக்கான சிகிச்சைக்காக அங்கே சென்றவர் பிறகு தன் சிகிச்சையை மறந்து அங்கே இருந்த பிற நோயாளிகளுக்கு மதபோதனையும், ஃபெய்த் ஹீலிங்கும் செய்யத் தொடங்கவே அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், அவர் தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்விஷயத்தில், தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்களென அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலும் உமாசங்கர் ஐஏஎஸ் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

samiApr 29, 2019 - 08:44:20 PM | Posted IP 172.6*****

உங்களுக்கு எதற்கு பூணூல் ஞாபகம் வருகிறது - அவன் மட்டும்தான் அடிச்சா திருப்பி அடிக்கமாட்டான் என்பதாலேயே - இதே வீரமணி - ஒரு பேட்டியில் - குறிப்பிட்ட மத கடவுள்களை இழிவு செய்கிறீர்களே - மற்ற மாதங்கள் பற்றி வாய் திறப்பதில்லையே என்ற கேள்விக்கு - பதில் இல்லாமல் திணறினார் - ஆக எதற்கு எடுத்தாலும் பூணுல் மட்டுமே கண்ணுக்கு தெரிய காரணம் என்னவோ

மனிதன்Apr 24, 2019 - 04:54:08 PM | Posted IP 162.1*****

என்ன மதம்? பூணூல் போட்ட மதத்திலிருந்தா? பூணூல் போட தகுதி இல்லாத மதத்திலிருந்தா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சாமி (அவாளை எல்லாம் சொல்லிண்டு இருப்பாளே, அந்த சாமியா? அல்லது இந்த ராமசாமி, குப்புசாமி, கந்தசாமி, போன்ற சாமியா? . )

உண்மைApr 24, 2019 - 12:19:56 PM | Posted IP 162.1*****

டிஸ்மிஸ் செய்யணும்! இலங்கை சென்று பிரச்சாரம் பண்ணு!

சாமிApr 23, 2019 - 06:20:26 PM | Posted IP 172.6*****

இவர் ஜாதி அடிப்படையிலான சலுகைகளையும் அனுபவித்து கொண்டு - வேறு மதமும் மாறி இருக்கிறார் - தைரியம் இருந்தால் தான் மதம் மாறிவிட்டேன் - எனக்கு இனி சலுகைகள் வேண்டாம் என்று சொல்லட்டுமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory