» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 4:15:08 PM (IST)

கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 3 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் தொடங்கவிருக்கிறது. 

பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்கப்படும் எனவும் கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும் அலுவலக நேரத்தில் காரணமின்றி பள்ளிக்கு வராமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 


மக்கள் கருத்து

உண்மைApr 24, 2019 - 06:23:12 PM | Posted IP 141.1*****

தலைமையாசிரியர்களும் அலுவலக ஊழியர்களும் மட்டும் வந்தால் போதும். இது எப்பொழுதும் உள்ள நடைமுறை. எல்லா ஆசிரியர்களும் வரவேண்டியதில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory