» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கை வழியாக தமிழகத்தை நோக்கி நகரும் புயல்? தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 12:10:16 PM (IST)

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அது அங்கிருந்து நகர்ந்து 28-ந்தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகருகிறது.

அதன்பின்னர், இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது. 25-ந்தேதிக்கு பிறகு தான் அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும். தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications




Black Forest Cakes




Thoothukudi Business Directory