» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசியில் பிரபல ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து : கோடிக்கணக்கில் பொருட்கள் சேதம்

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 11:54:09 AM (IST)தென்காசியில் பிரபல ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சாமிசன்னதி தெருவில் முகமது இஸ்மாயில் மகன் ரகுமான்கான் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். இங்கு நேற்றிரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவு தென்காசியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மறுபடியும் மின்சாரம் வந்த போது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ வேகமாக பரவியதில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் டிஎஸ்பி காேகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் அங்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தீயை அணைக்க 5 ஊர்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsCSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory