» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கேட்கும் அதிமுக ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 11:36:04 AM (IST)

"உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் கேட்கும் அதிமுக ஆட்சியை மக்கள் எப்போது தேர்தல் வந்தாலும் மன்னிக்க மாட்டார்கள்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். .

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. மே மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அந்தக் கெடு முடியும் வரை அமைதியாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் அதிமுக அரசின் ஊதுகுழலாக மாறியுள்ள மாநில தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டிருப்பது, உள்ளாட்சி ஜனநாயகத்தை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யும் சட்டவிரோத செயலாகும்.

2016 அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடைபெறவில்லை. இதனால் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே குப்பைமேடு போல் குவிந்து நிற்கின்றன. கிராம நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து விட்டது. கிராம ராஜ்யத்தின் உயிர் மூச்சான உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏறக்குறைய 30 மாதங்களாக தேர்தல் நடத்தாமல் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாய்தா வாங்கிக் கொண்டு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை நாசமாக்கும் அதிமுக ஆட்சியை மக்கள் எப்போது தேர்தல் வந்தாலும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக ஆட்சியும், தமிழக மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாகக் கைவிட்டு, உள்ளாட்சித் தேர்தல்களை  காலதாமதம் இல்லாமல் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education

New Shape TailorsJoseph Marketing

Thoothukudi Business Directory