» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலாவை ஓரம் கட்டிய டிடிவி தினகரன் ? : அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

திங்கள் 22, ஏப்ரல் 2019 7:52:56 PM (IST)

டிடிவி தினகரனை ஓரம் கட்ட சசிகலா முடிவு செய்திருந்த நிலையில் முந்திக்கொண்டு சசிகலாவை தினகரன் ஓரம் கட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி தான் பறிக்கப்பட்டதாக அனைவரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சசிகலாவை தினகரன் கட்சியில் இருந்து நீக்கி விட்டார் என்பதுதான் யாருக்கும் தெரியாத ஒரு தகவல். அதிமுகவிற்கு உரிமை கோரி சசிகலா வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதால் அதற்கு வசதியாக அவருடைய பதவி பறிக்கப் பட்டதாக தினகரன் தரப்பு கூறிவந்த நிலையில் கட்சியிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இது குறித்து விசாரித்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் தினகரனின் நிலைப்பாட்டை சசிகலாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை எனவும்  காங்கிரசுடன் கூட்டணிக்கான வாய்ப்பு இருந்தும் அதனை தினகரன் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் இதேபோல் அதிமுகவிற்கு எதிராகவோ அல்லது திமுகவிற்கு எதிராக வலுவான ஒரு கூட்டணி அமைக்காமல் வாக்குகளைப் பிரிப்பதற்கும் மட்டுமே தினகரன் தேர்தல் வேலை பார்த்து விட்டதாக சசிகலாவிற்கு ஒரு சந்தேகம் இருந்தது. 

மேலும் தேர்தல் செலவுக்கு என்று தன்னிடம் இருந்து பெற்ற தொகையில் கணிசமான தொகையை செலவு செய்யாமல் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் தினகரனை கூட ஒதுக்கி வைத்து விட்டார் என்றும் சசிகலாவிற்கு ஏமாற்றம் இருக்கிறது. இதனால்தான் தேர்தல் முடிந்த கையோடு சசிகலாவை சென்ற சந்திக்காமல் அவரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளார் தினகரன். 

இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்னரே யூகித்த சசிகலா தினகரனை தேர்தலுக்குப் பின்னர் அல்லது தேர்தல் முடிந்த பிறகு ஓரம் கட்டி விடலாம் என்கிற திட்டத்தில் இருந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தன்னுடைய அரசியல் வாழ்விற்கு சிக்கல் ஏற்படும் என்று கருதி சசிகலாவை அதிரடியாக ஒதுக்கி வைத்துள்ளார் தினகரன். இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


மக்கள் கருத்து

அருண்Apr 23, 2019 - 11:40:22 AM | Posted IP 157.5*****

எல்லாம் சும்மா ஏமாத்து வேலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications

Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory