» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாளை நிழல் இல்லா நாள்: அரிய நிகழ்வை பொதுமக்கள் கண்டு ரசிக்க ஏற்பாடு

சனி 20, ஏப்ரல் 2019 3:49:13 PM (IST)

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் நாளை (ஏப்ரல் 21) நிழல் இல்லா நாள் வருவதையொட்டி, புதுச்சேரியில் அது குறித்த அறிவியல் நிகழ்வை கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுவை அறிவியல் இயக்கச் செயலர் நா.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சூரியன் நம் நேர் உச்சிக்கு வரும். ஓர் இடத்திலுள்ள பொருளின் நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே "நிழல் இல்லா நாள் என்கிறோம். புதுச்சேரியிலும், தமிழகத்தின் விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நிழல் இல்லா நாளாக வரும் ஞாயிற்றுக்கிழமை இருக்கும். 

இந்த நிகழ்வு மீண்டும் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறும். மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வைக் காண முடியும். பகல் 12 மணிக்குத்தான் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகும். இந்த நிகழ்வை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் நமது அட்சரேகையை நாமே கணக்கிட முடியும். மேலும், சூரியனின் உயரத்தையும் கணக்கிடலாம்.

நிழல் இல்லா நாள் குறித்த வானியல் நிகழ்வை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், புதுச்சேரி உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்விளக்க நிகழ்ச்சியை புதுவை அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கருத்தாளர்களாக பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் மதிவாணன், அறிவியல் இயக்க பொதுச் செயலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஹேமாவதி உள்பட அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் பங்கேற்று விளக்கமளிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியைக் காண விரும்பும் பொதுமக்கள் அ.ஹேமாவதி (8825425745), ப.இரவிச்சந்திரன் (94427 86122) ஆகியோரை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes

CSC Computer Education


New Shape Tailors



Nalam Pasumaiyagam

Joseph Marketing



Thoothukudi Business Directory