» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் தேர்தல் விதிமீறலில் திமுகவினர் முதலிடம் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சனி 20, ஏப்ரல் 2019 3:34:10 PM (IST)

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திமுகவினர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேற்கு மண்டலத்தில் 941, மத்திய மண்டலத்தில் 712, வடக்கு மண்டலத்தில் 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகள் அடிப்படையில் திமுக தரப்பினர் மீது 1695 வழக்குகளும், அதிமுக தரப்பினர் மீது 1453 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.213.18 கோடி ரொக்கம், 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்து. மேலும், ரூ.3.51 கோடி மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam

CSC Computer Education



Thoothukudi Business Directory