» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஏப்ரல் 21‍ முதல் விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு

சனி 20, ஏப்ரல் 2019 12:36:49 PM (IST)

4 தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21- ம்தேதி முதல் விருப்ப மனு பெறலாம் என அக்கட்சி அறிவித்துள்ளாது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் (21-ம் தேதி) நாளை மறுநாள் முதல் விருப்ப மனு பெறலாம். அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை ரூ.25000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Anbu Communications

Nalam Pasumaiyagam



CSC Computer Education



Thoothukudi Business Directory