» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிக மார்க் எடுத்தவர்கள் படத்தை வைத்து விளம்பரம் தேடக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

சனி 20, ஏப்ரல் 2019 11:22:10 AM (IST)

அதிக மார்க் எடுத்த மாணவ, மாணவியர் பெயர், புகைப்படத்தை ஊடகங்களில் விளம்பரம் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி 10-ம் வகுப்புக்கும், மே 8-ம் தேதி 11-ம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆரோக்கியமற்ற போட்டி சூழல் மற்றும் மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து வகையான பள்ளிகளும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தரவரிசை பட்டியல் மற்றும் அதிக மார்க் எடுக்கும் மாணவர் பெயர், புகைப்பட விவரங்களை நாளிதழ், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. இதுதொடர்பாக எல்லா பள்ளி தலைமையாசிரியர்கள், நிர்வாகிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், அரசு உத்தரவுப்படி செயல்படாத பள்ளிகள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரங்களையும் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu CommunicationsBlack Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory