» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூரில் சித்திரைப் பௌர்ணமி விழா : மாபெரும் கலச,விளக்கு, வேள்விபூசை

வெள்ளி 19, ஏப்ரல் 2019 6:34:59 PM (IST)மேல்மருவத்தூரில் சித்திரைப் பௌர்ணமி விழாவினை முன்னிட்டு 1008 யாககுண்டங்கள் அமைத்து மாபெரும் கலச,விளக்கு, வேள்விபூசையை ஆன்மிககுரு பங்காருஅடிகளார் நடத்தினார்.

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் சித்திரைப் பௌர்ணமியை முன்னிட்டு மழைவளம் பெறுகவும் மக்கள் நல்ல குணங்களையும் செயல்களையும் கொண்டு மனநிம்மதியுடன் வாழ்ந்திடவும், உலக நன்மைக்காகவும் வேண்டி 1008க்கும் மேற்பட்ட சிறப்பு யாககுண்டங்கள் அமைத்து ஒருமாபெரும் கலச, விளக்கு, வேள்விபூசையை இன்று மாலை 5 மணிக்கு ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் நடத்தி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இவ்வேள்வியில் பல முக்கியபிரமுகர்களும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் பங்கேற்றனர்.

மனிதகுலம் இயற்கையை நம்பி, இயற்கையை மதித்து, இயற்கையை வழிபட்டு வளம்பெற்று, நலம்பெற்று மேன்மைபெற, மனித இனம் செயற்கையும், அழிவை கொடுக்கும் அறிவியலையும் விட்டு, இயற்கையை போற்றும் அறிவியலை ஏற்று வளம் பெற, ஆலமரநிழல் போன்ற, தாய் தந்தையரின் பாசத்தை உணர்ந்து மதித்து, உண்மையான சொல்லுடன், உண்மையான செயலுடன் என்றும் உண்மையாக நலமுடன் வளமுடன் வாழ்க்கை அமைய, மக்களிடையே வன்கொடுமையான சிந்தனைகளால் ஏற்படும் வக்கிரமான செயல்கள் நீங்கி, அமைதியான ஆன்மிக உணர்வுகளுடன் கூடிய வளமான எதிர்காலம் அமைய, பருவமழை பொய்க்காமல் காலத்தோடு பெய்து, நாட்டில் அனைத்து நீர் நிலைகள் நிரம்பி, நீர்வளம் நிலவளம் செழிக்க, நாட்டில் விவசாயம், கல்வி, அனைத்து தொழில்களும் சிறந்து வளர்ந்து, உற்பத்த பெருகி,பொருளாதாரம் செழித்துநாடு வளமடைய, உலகநாடுகளிடையே அழிவை கொடுக்கும் அறிவியல் போட்டியின்றி, அமைதியும், சமாதானமும், வளாச்சியும் அமைய வேண்டி சங்கல்பித்து, வேள்வி சிறப்புற நடைபெற்றது.

வேள்வியில் சூலம், ஒற்றைநாகம், இரட்டைநாகம், முக்கோணம், சதுரம், சாய்சதுரம், அறுகோணம், எண்கோணம்,வட்டம் போன்ற கோணங்களை உள்ளடக்கி அமைத்து 1000க்கும் மேற்பட்ட யாக குண்டங்களையும், 1000க்கும் மேற்பட்ட கலச, விளக்குகளையும் ஆன்மிககுருஅடிகளார் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்து வேள்விபூசை நடைபெற்றது. சித்தர்பீடத்தின் ஒம்சக்திமேடையின் முன்பாக அண்டத்தை காக்கும் முகமாக மிக பிரமாண்டமான அண்டவெளிசக்கரம் அமைக்கப்பட்டிருந்தது. 

அதில் நவகிரகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த யாககுண்டஅமைப்பு கண்களுக்கும், கருத்துக்கும் ஆன்மிக விருந்தாக உயிர்ப்புடன் அமைந்திருந்தது. மேலும் கருவறை முன்பாக பஞ்சதெய்வ சக்கரமும், புற்று மண்டபத்தின் முன்பாக இயற்கைசக்கரம், தீமைகளையும் அதர்மத்தையும் அகற்றும் அடையாளமாக கத்தி,பிரம்பு, சாட்டை, சூலம்,கதை,சங்குசக்கரம் போன்ற ஆயுதங்களை வைத்து சக்கரங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
 
இவ்வேள்விக்காக கடந்த7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு குருபூசை நடத்தப்பட்டு சிறப்பான வேள்விச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 1000 செவ்வாடைத் தொண்டர்கள் வேள்வி, உணவு, குடிநீர்,பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனர். அன்று முதல் இன்று வரை பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று வேள்வியின் துவக்கமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் இலட்சுமிபங்காருஅடிகளார் முன்னிலையில் யாகசாலை முழுவதும் திருஷ்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கோபூசை நடைபெற்றது.வேள்வியில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, அரசு தேர்வாணைக்குழு தலைவர் அருள்மொழி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் முருகேசன் மற்றும் ராஜேஸ்வரன், தென்னிந்திய ரயில்வேஅதிகாரி செந்தில்குமார், ஒய்வுபெற்ற தென்னிந்திய இரயில்வேஅதிகாரி ஜெயந்த், தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாகஇயக்குநர் டாக்டர்.மகேந்திரன், முதலமைச்சரின் சிறப்புதிட்டஅதிகாரி ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்டநீதிபதி கருணாநிதி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் இயக்கத் துணைத்தலைவர் கோ.ப.அன்பழகன் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.
 
வேள்வியில் கலந்து கொள்பவர்களின் வசதிக்கேற்ப அவரவர் யாக குண்டங்களில் கலந்து கொள்ளவும், வாகனங்கள் நிறுத்திவிட்டு வரவும், தகவல் நிலையங்கள் மூலமும், பதாகைகள் மூலமும் தெளிவான அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் தீயணைப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டிருந்தன. முதல்உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. வேள்வி நிறைவு பெற்றதும் அவற்றில் பங்கேற்ற பக்தர்கள் தாங்கள் பங்கேற்ற யாககுண்டங்களிலிருந்து வேள்விச் சாம்பலை தங்கள் வீடுகளில் வைத்து பூசைசெய்ய எடுத்துச் சென்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் பிற ஏற்பாடுகளை ஆதிபராசக்தி இளைஞரணி மற்றும் மகளிர் அணியினர் முறையே இயக்கத் துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவிரமேஷ் தலைமையில் செவ்வனே செய்திருந்தனர் .விழா ஏற்பாடுகளை இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காருஅடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதிபராசக்தி சக்திபீட மற்றும் வழிபாட்டுமன்ற சக்திகள், தஞ்சைமாவட்டதலைவர் சக்தி. வாசன் மற்றும் சக்திபீடங்களின் இணைச்செயலாளர் இராஜேந்திரன் பொறுப்பிலும் சிறப்பாகஏற்பாடுகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory