» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார், ஆனால் பேச மாட்டார்: தேமுதிக துணைப் பொதுச் செயலர்

வெள்ளி 15, மார்ச் 2019 12:01:36 PM (IST)

தேர்தல் பிரசாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  பேச மாட்டார் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பாஜகவுடன் கூட்டணியில் இணைவதில் எந்த தடையும் ஏற்படவில்லை. நாங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் விரும்பியத் தொகுதிகள் கிடைத்ததால் அதனை ஏற்றுக் கொண்டோம் என்று இழுபறி நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்லாமல், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்கு அக்கட்சி சில வாக்குறுதிகளை அளித்து, மீண்டும் பாஜக  தலைமையிலான ஆட்சி அமைந்ததும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார். ஆனால் பேச மாட்டார். அவர் தொகுதி வாரியாக பிரசாரத்துக்கு வந்தாலே போதும். கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள் என்றார். நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, வேட்பாளர்கள் குறித்து விஜயகாந்துதான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது குறித்தும் அவரே இறுதி முடிவு எடுப்பார் என்றும் சுதீஷ் கூறினார். 


மக்கள் கருத்து

ஒருவன்Mar 16, 2019 - 08:06:20 AM | Posted IP 162.1*****

பாவம் வயதாகிவிட்டது.. அவரை பொம்மை போல் வைத்து ஓட்டு பிச்சை எடுக்கும் அதிமுக கட்சிகள்...

VallikkannuMar 15, 2019 - 05:07:41 PM | Posted IP 162.1*****

மச்சானை அடகு வச்சு அவரை விட அதிக அளவில் பணம் சம்பாதிக்க அக்கா வேசம் ரொம்ப பிரமாதம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

New Shape Tailors

Anbu Communications

Joseph Marketing

CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory