» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: மதுரை ஆதீனம் வலியுறுத்தல்

வியாழன் 14, மார்ச் 2019 11:02:28 AM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு அனைத்துக் கட்சிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

இப்படியான வன்முறைச் சம்பவங்களை ஒழிக்க வேண்டும் என்றால், அரபு நாடுகளில் உள்ள சட்டத்தைப் போல இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டும்.   பாலியல் வன்முறைகளை தடுக்க இதைத் தவிர வேறு வழியில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மாணவிகள், பெண்கள் அதிகளவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்-Mar 14, 2019 - 05:03:57 PM | Posted IP 172.6*****

ஆன்மிகத்தில இந்த மாரி பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லு ஆதீனம். மரணதண்டனை தான் உங்க ஆன்மிக விடையை ??.. அரசியல்வாதி பேசுற மாரி மரண தண்டனை கொல்லணும்னு குத்தணும்னு சொல்றியே சார்வாள்..

நிதிதியானந்த ரசிகன்Mar 14, 2019 - 02:24:32 PM | Posted IP 162.1*****

பொள்ளாச்சி அரசியல்வாதி கொடூர காமவெறி மகன் போல நித்தியானந்தா அப்படி மிரட்டி கற்பழித்தவர் கிடையாது. இந்த மொட்டை சாமிக்கு க்கு தெரியாதா

பாலாMar 14, 2019 - 12:14:08 PM | Posted IP 162.1*****

அப்படியா பார்த்தா உன் சிஷ்யன் நித்தியாவிற்குதான் முதல் தண்டனை...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors
CSC Computer Education

Joseph Marketing

Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory