» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித் தொகை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திங்கள் 11, பிப்ரவரி 2019 2:16:14 PM (IST)

தமிழகம் முழுவதும் உள்ள ஏழைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது அதில் தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளர்கள் , நகர்ப்புற ஏழைகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். 

இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். இந்த சிறப்பு உதவித்தொகைக்காக 1,200 கோடி ரூபாய் 2018 - 19ம் ஆண்டின் துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory