» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஜெயித்து புதிய இந்தியா பிறக்கும் : குஷ்பு நம்பிக்கை

திங்கள் 11, பிப்ரவரி 2019 1:25:59 PM (IST)

தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் என்ற முறையில் நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்? அதை தான் கேள்வி கேட்கிறோம். அதற்கு பதில் தரவில்லை என்பதால் தான், நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். எந்த ஆதாரமும் இல்லாமல் பேசி வருகிறார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி மட்டும் தான் 2014ல் பேசினார். ஆனால் அது நீதிமன்றத்தில் இல்லை என்றாகி விட்டது. மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. 

நாங்கள் கோஷ்டி பார்க்கவில்லை. எல்லாருக்கும் ராகுல் காந்தி மட்டும் தான் தலைவர். இளம் தலைமுறையினரை போட்டது நல்ல விஷயம். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சியினர் யாரும் ஏற்க மாட்டோம் என்று சொல்லவில்லை. பிரியங்கா காந்தி என்கிற சிங்கம் இறங்கி உள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இரண்டு பேரும் சேர்ந்து நல்ல செயல்பாட்டைத் தருவார்கள். புது இந்தியா பிறக்கும். காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு 40க்கு 40 என உள்ளது எனக் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory