» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு

சனி 12, ஜனவரி 2019 8:37:15 PM (IST)

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17-ம் தேதிகளில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்பதிவு குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்ட நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு முதலே பள்ளி வாசலில் காத்திருந்தனர். 

காலை 5 மணி அளவில் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் வகுப்பறையில் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு உயரம், எடை, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Nalam Pasumaiyagam

Joseph Marketing

Anbu Communications

Black Forest Cakes

New Shape Tailors





Thoothukudi Business Directory