» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொடநாடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஆ.ராசா பரபரப்பு பேட்டி

சனி 12, ஜனவரி 2019 8:28:00 PM (IST)

கொடநாடு மர்ம மரணங்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தி.மு.க அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில், பத்திரிகையாளர் மேத்யூ, கொடநாடு தொடர்பாக கொடுத்த பேட்டியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி இதற்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும் என கமிஷனரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிகிறது. பல்வேறு கோணங்களிலும் விசாரித்தால், எடப்பாடி பழனிசாமி தான் வழக்கின் குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதற்கான ஆதாரம் கிடைக்கும். 

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா காலமானார். அதிலிருந்து அடுத்த இரண்டு மாதத்தில் சசிகலா தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறார். இதையடுத்து, எடப்பாடி முதல்வராகிறார். அடுத்த இரண்டு மாதத்தில் கொடநாடு காவலாளி ஓம் பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து, டிரைவர் கனகராஜ் மரணமடைகிறார். அடுத்த 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் சயன் என்பவர் குடும்பத்தோடு கார் விபத்தில் மனைவி மக்களை பறிகொடுத்து தப்பிக்கிறார். கொடநாடு பங்களாவுக்கு சிசிடிவி கேமரா இன்சார்ஜ் தினேஷ் தற்கொலை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. 

கொடநாடு எஸ்டேட் சொத்துகுவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களில் பிரதான சொத்து. அதை ஜெயலலிதா கேம்ப் ஆபீஸாக பயன்படுத்தினார். தலைமை செயலகத்திலிருந்துகொண்டு செய்யும் பணிகளை அவர் அங்கே செய்துள்ளார். அப்படியான இடத்தில் சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு போலீஸ் கூடவா இருந்திருக்கமாட்டார்கள்?. இல்லாமல் போனதற்கு என்ன காரணம்?. 27 சிசிடிவி கேமராக்களும் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யாததற்கு என்ன காரணம்?. இப்படியிருக்க எடப்பாடி பழனிசாமிதான் இதை செய்யச்சொன்னார் என சயன் தெளிவுபடுத்தியுள்ளார். கூட்டு சதி என்றால் இதில் முதல் குற்றவாளி எடப்பாடி பழனிசாமிதான். 

விசாரணையை சயன் என்பவரிடமிருந்து தொடங்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால், அதில் எடப்பாடி பழனிசாமி பெயர்தான் முதலில் குறிப்பிட வேண்டும். குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சியில் அமர்வோம். முதல்வர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சயனிடம் முறையாக விசாரிக்க வேண்டும். தெஹல்காவுக்கும் எங்களுக்கு எதுவும் சம்பந்தமுண்டா?. இதை நாங்கள் செய்தோம் என்பது வேடிக்கை. இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer Education

Joseph Marketing

crescentopticals




Thoothukudi Business Directory