» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விடுபட்டோருக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சனி 12, ஜனவரி 2019 4:26:45 PM (IST)

தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறாமல் விடுபட்டோருக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மட்டுமின்றி சா்க்கரை மற்றும் எந்தப் பொருளும் வேண்டாத அட்டை வைத்திருப்போா் வரை அனைவருக்கும் ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கடந்த சில நாள்களாக ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 

பல நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோா் இருப்பதாகவும் அவா்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு மேல்முறையீடு செய்து அரிசி, சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களான 1.98 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதில் விடுபட்டோருக்கும் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அரிசி மற்றும் சா்க்கரை அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும். எந்தப் பொருளும் வேண்டாதோா் அட்டை வைத்திருந்தால் அவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே அளிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education

Joseph MarketingBlack Forest Cakes

Nalam PasumaiyagamAnbu CommunicationsThoothukudi Business Directory